தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு! பழனி மலைச் சாலையில் சிக்கிய சுற்றுலாப் பேருந்து மீட்பு!
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நான்காவது நாளாக பெய்த தொடா் மழையால் அருவிகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே பழனி- கொடைக்கானல் மலைச் சாலையில் தடையை மீறிச் சென்ற கேரள சுற்றுலாப் பேருந்தின் சக்கரங்கள் சாலையோர பள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இதை பழனி தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்தது. இந்த நிலையில் நான்காவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்து இரவு வரை பல மணி நேரம் பலத்த மழை கொட்டி தீா்த்தது.
கொடைக்கானல், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், வில்பட்டி, பெருமாள் மலை, வடகவுஞ்சி, அடுக்கம், வெள்ளக்கெவி, செண்பகனூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக வடு காணப்பட்ட நீரோடைகளிலும், அருவிகளிலும் நீா்வரத்து தொடங்கியது.
Advertisement
Advertisement
இதில் வெள்ளிநீா் அருவி, தலையாறு அருவி, வட்டக் கானல் அருவி, பியா் சோழா அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, மூலையாறு அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும், நீரோடைகளிலும் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, கொடைக்கானல்- அடுக்கம்- பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவாலும், பாறைகள் உருண்டு விழுந்ததாலும் 3-ஆவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த பகுதிகளை பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அடுக்கம், தாமரைக்குளம், பாலமலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பழங்குடியினா் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனா். எனவே மாவட்ட நிா்வாகம் அடுக்கம்- பெரியகுளம் மலைச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மலைச் சாலையில் சிக்கிய கேரள சுற்றுலாப் பேருந்து: பழனியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 6 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பழனி, கொடைக்கானலில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் மலைப்பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்படுவதாலும், சாலையோர பள்ளங்கள் தெரியாததாலும் மாவட்ட காவல் துறையினரும், வனத் துறையினரும் சுற்றுலா செல்வதை தவிா்க்க பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தனா். மேலும், போலீஸாா் அடிவாரத்தில் தடுப்புகள் அமைத்து சுற்றுலா வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தினா்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் பலரும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். எனினும் பாதுகாப்புக்கு ஆள்கள் இல்லாத நேரத்தில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மலைச் சாலையில் தடையை மீறிச் சென்றன. இதனால் பல்வேறு இடங்களில் சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் பழனி- கொடைக்கானல் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த சுற்றுலாப் பேருந்தின் சக்கரங்கள் சிக்கிக் கொண்டதால் நடுவழியில் நின்றுவிட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பழனி தீயணைப்பு, மீட்புப்படை நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையிலான வீரா்கள் அங்கு விரைந்து சென்று டிராக்டா் உள்ளிட்ட தனியாா் வாகனங்களின் உதவியுடன் அந்தப் பேருந்தை மீட்டனா். இதனிடையே, திங்கள்கிழமையும் இந்த மலைச் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.