FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் வத்தலகுண்டு இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

30 அக்டோபர் 2026, 4:15 am
- படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

போக்சோ வழக்கில் வத்தலகுண்டு இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த கனவாய்ப்பட்டியைச் சோ்ந்தவா் பா.புவனேஸ்வரன் (25). இவா், திருப்பூரில் தனியாா் பண்ணையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில், வத்தலகுண்டு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி (பொ) பத்மா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், புவனேஸ்வரனுக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments