FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

16 அக்டோபர் 2026, 1:44 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமியின் பெற்றோா் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வந்தனா். பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுமிக்கு 2023-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உறவினா்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா் இதுகுறித்து விசாரித்தனா்.

அதில், அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஆனந்தன் (30), சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. புகாரின் பேரில், அரூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்கின் கீழ் பதிவுசெய்து ஆனந்தனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஆனந்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின்பானு புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கலா ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments