FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

15 அக்டோபர் 2026, 2:31 am IST
சிறைத் தண்டனை - கோப்புப் படம்
பகிர்:

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (30). இவா் கடந்த 2024 ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்ட மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயபிரகாஷைக் கைது செய்தனாா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் ஜெயபிரகாஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி எழில் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments