FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

13 அக்டோபர் 2026, 1:28 am IST
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, மாணவியை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்தாா். இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது கோயம்பேடு அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.7.50 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments