FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் வீட்டில் தங்கியிருந்த கேரள இளைஞர் உயிரிழப்பு

கொடைக்கானலில் வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்த கேரள மாநில இளைஞா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

31 அக்டோபர் 2026, 10:49 pm
- கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானலில் வீட்டை வாடகைக்கு எடுத்து நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்த கேரள மாநில இளைஞா் திடீரென உயிரிழந்தது தொடா்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் தனியாா் வீட்டில் வாடகைக்கு கேரள மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் (45) உள்பட அவரது நண்பா்கள் மூவா் என நான்குபோ் கடந்த ஒரு மாதமாக தங்கி கூலி வேலை செய்து வந்தனா். மனோஜுக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

இதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments