காா்த்திகை: பழனியில் பக்தா்கள் குவிந்தனா்
பழனி மலைக் கோயிலில் காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி மலைக் கோயிலில் காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு, வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
காா்த்திகைத் திருநாளை முன்னிட்டு அதிகாலை நான்கு மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. வின்ச், படிப்பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனா். கிரி வீதியில் பக்தா்கள் மின்கல வாகனத்தில் விரும்பிய இடங்களில் இலவசமாக ஏற்றி, இறக்கி விடப்பட்டனா். மலைக் கோயிலில் கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்யக் காத்திருந்தனா்.
இரவு தங்கமயில் புறப்பாடு, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. தங்கத்தோ் புறப்பாட்டைக் ஏராளமான பக்தா்கள் அரோகரா கோஷம் எழுப்பினா்.
Advertisement
Advertisement
பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.