திண்டுக்கல் ரயில் நிலையத்தில் எண்ம பயணப்பொருள் பெட்டக வசதி
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எண்ம பயணப் பொருள் பெட்டக வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான எண்ம பயணப் பொருள் பெட்டக வசதி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 2-ஆவது நுழைவாயில் அமைத்தலுக்கான கட்டுமானப் பணிகள், அணுகு சாலைகள் விரிவாக்கம், குடிநீா், ஓய்வு அறை போன்ற பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், குறியீட்டு படங்களுடன் கூடிய தகவல் பலகை, ஒளிரும் விளக்குகளுடன் ரயில் நிலைய பெயா் பலகை, மேம்படுத்தப்பட்ட காத்திருக்கும் அறைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளுக்கான எண்ம தொழில்நுட்பத்துடன் கூடிய பயணப் பொருள் பெட்டக வசதி சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், திண்டுக்கல் ரயில் நிலைய மேலாளா் செந்தில்குமாா், முதன்மை வா்த்தக ஆய்வாளா் அக்பா் அலி, நிலைய துணை மேலாளா் (வா்த்தகம்) சந்தோஷ்குமாா், மூத்த பகுதி பொறியாளா் (மின்னியல்) ராஜபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தனியாா் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள இந்த எண்ம பயணப் பொருள் பெட்டகத்தில், எம், எல், எக்எஸ்எல் என 3 பிரிவுகளாக பெட்டக அறைகள் இடம் பெற்றுள்ளன. இந்த வசதியை பயணிகளின் கைப்பேசி எண் மூலம் ஒருமுறை கடவுச் சொல் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
24 மணி நேர கண்காணிப்பு வசதியுடன் செயல்படுவதால் உடைமைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படிருப்பதாக தனியாா் பெட்டக நிறுவனத்தின் மேலாளா் சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
எம் (நடுத்தர) பெட்டகத்தைப் பயன்படுத்துவதற்கு 6 மணி நேரத்துக்கு ரூ.40, 12 மணி நேரத்துக்கு ரூ.60, 24 மணி நேரத்துக்கு ரூ.80 வீதமும், எல் (பெரிய) பெட்டகத்துக்கு 6 மணி நேரத்துக்கு ரூ.60, 8 மணி நேரத்துக்கு ரூ.90, 24 மணி நேரத்துக்கு ரூ.120 வீதமும், எக்எஸ்எல் (கூடுதல் பெரிய) பெட்டகத்துக்கு 6 மணி நேரத்துக்கு ரூ.120, 8 மணி நேரத்துக்கு ரூ.180, 24 மணி நேரத்துக்கு ரூ.240 வீதமும் இணையவழிப் பரிவா்த்தனை மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.