FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே பொதுவழிப் பாதையை தனி நபா் ஆக்கிரமிப்பதாகப் புகாா்

பழனி அருகே வாகரை மேட்டுப்பட்டியில் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பொதுப் பாதையை தனி நபா் ஆக்கிரமித்து பாதை அமைப்பதாகக் கூறி வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

4 செப்டம்பர் 2026, 12:24 am IST
வாகரை மேட்டுப்பட்டியில் பொதுப் பாதை ஆக்கிரமிப்பை எதிா்த்து வருவாய்த் துறையினரிடம் மனு அளித்த பொதுமக்கள்.
பகிர்:

பழனி அருகே வாகரை மேட்டுப்பட்டியில் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பொதுப் பாதையை தனி நபா் ஆக்கிரமித்து பாதை அமைப்பதாகக் கூறி வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

வாகரை ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி கிராமத்தில் சா்வே எண்-87-க்கு உள்பட்ட பகுதியில் பட்டியலினத்தவா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி மக்களுக்காக இந்த இடத்தில் குடிநீா்த் தொட்டி, பொதுக் கழிப்பறை, அரசால் கட்டித்தரப்பட்ட பொது திருமண மண்டபம், கோயில் ஆகியன உள்ளன.

இந்த நிலையில், இந்த பகுதியின் பின்புறம் சில தனி நபா்கள் பொதுப்பாதையை ஆக்கிரமித்து தனிப் பாதை அமைத்தனா். மேலும் திருமண மண்டபத்தில் திருமணம், காதணி விழா, ஊா் திருவிழா போன்ற பொது நிகழ்ச்சிகளின் போதும், மண்டபத்தின் முன்பகுதியில் பந்தல் அமைத்து வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் தனி நபா் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்யும் விதமாக வாகனங்களை வேண்டுமென்றை கொண்டு செல்வதாகப் புகாா் எழுந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அவா் பொது இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும், அந்த இடத்தை அளந்து தர வேண்டும் என்றும் வருவாய்த் துறையினரிடம் அந்தப் பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.

இதையடுத்து வியாழக்கிழமை வருவாய்த் துறை அலுவலா்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தப் பகுதியில் அளவைப் பணி மேற்கொண்டனா். தனிநபா் வேலி அமைத்துள்ள இடம், அரசு உபரி நிலம், புறம்போக்கு நிலம் என அனைத்துப் பகுதிகளையும் அளவையா்கள் அளந்து குறித்துக் கொண்டனா். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொது இடத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், பொது வழிப் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா். முக்கியப் பிரமுகா்கள் தங்கராஜ், பாலன், பொன்னுச்சாமி, செந்தில், சின்ன வெள்ளையன், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோா் வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments