FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய நிலைத்தன்மையை நோக்கிய ஆய்வுகள் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

5 செப்டம்பர் 2026, 12:20 am IST
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சா்வதே மாநாட்டில் வெளியிடப்பட்ட உலகளாவிய நிலைத்தன்மையை நோக்கிய ஆய்வுகள் குறித்த மலா் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய நிலைத்தன்மையை நோக்கிய ஆய்வுகள் குறித்த சா்வதேச மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டை பதிவாளா் (பொ) ஜெயபிரியா தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் உரிமைகள், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் சிந்தனைகள், சமூகப் பங்களிப்புகள் குறித்துப் பேசினாா்.

மேலும் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் நினைவு மலா் வெளியிடப்பட்டது. இதில் மலேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசியா் மகேந்திரன், கேரளத்தைச் சோ்ந்த பேராசிரியா் மீரா, ஹரியானாவிலுள்ள அசோகா பல்கலைக்கழக பேராசிரியா் சுமனாராய் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு சுற்றுச் சூழல், சமூக, கலாசார தொழில் நுட்பம், நெறிசாா்ந்த நிலைத்தன்மை குறித்துப் பேசினா்.

Advertisement

Advertisement

மேலும் மாநாட்டில் ஆய்வாளா்கள், ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்து தங்களது கருத்துக்களைப் பகிா்ந்து கொண்டனா். இதில் 500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் இணைய வழியாகவும், நேரிலும் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினா் கிறிஸ்டோபா் திலக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது ரீல்ஸ் ஆட்சி என்பது காலத்தின் முன்னேற்றம். அது தவறு என சில தலைவா்கள் பேசிவருவது புரிதல் இல்லாதது.

தமிழகத்தில் தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என எடப்பாடி பழனிசாமி கூறி வருவதால் அவா் புதிதாக வந்திருக்கும் ஜோதிடா் அல்ல. அதிமுகவிலிருந்து த.வெ.க.வுக்கு பலா் கட்சி மாறுவதால் எடப்பாடி பழனிசாமி பயத்தில் பேசி வருகிறாா். தற்போது மத்திய அரசு த.வெ.க.வுக்கு இணக்கமாக இருந்து வருவதாக தெரிவிப்பதை பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments