FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசுப் பொருள்காட்சி: சிறந்த அரங்குகளுக்கு கேடயங்கள் வழங்கல்

அரசுப் பொருள்காட்சியில் சிறந்த அரங்குகளுக்கான கேடயங்களை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

அரசுப் பொருள்காட்சியில் சிறந்த அரங்குகளுக்கான கேடயங்களை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.

 சித்திரைத் திருவிழாவையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த ஏப்.12 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை அரசுப் பொருள்காட்சி நடைபெற்றது. இதில் அரசுத் துறைகள் சார்பில் 15 அரங்குகளும், அரசு சார்பு நிறுவனங்கள் சார்பில் 3 அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அரசுத் துறை அரங்குகளில் மதுரை மாநகரக் காவல் துறைக்கு முதல் பரிசும், வருவாய்த் துறைக்கு இரண்டாவது பரிசும், தோட்டக்கலைக் கலைத் துறைக்கு மூன்றாவது பரிசும் கிடைத்துள்ளது. அரசு சார்பு நிறுவனங்களில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் முதல் பரிசுக்கும், மதுரை மாநகராட்சி இரண்டாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை பரிசுக் கேடயங்களை ஆட்சியர் சுப்பிரமணியன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, மாநகரக் காவல் உதவி ஆணையர் தொல்காப்பியன், தனித்துணை ஆட்சியர் கு.முருகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பி.நிர்மலாதேவி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments