FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேலூரில் பள்ளிக் குழந்தைகள் திடீர் காய்ச்சலால் பாதிப்பு

மேலூரிலுள்ள அரசு உதவிபெறும் அல் அமீன் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் 20-க்கு மேற்பட்டோர் திடீர் காய்ச்சல் காரணமாக பாதிப்படைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மேலூரிலுள்ள அரசு உதவிபெறும் அல் அமீன் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் 20-க்கு மேற்பட்டோர் திடீர் காய்ச்சல் காரணமாக பாதிப்படைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.

இப்பள்ளியில் படித்துவரும் மாணவ மாணவியர் கடந்த சில தினங்களாக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு உள்ளாகி மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 பள்ளிக்கு அருகிலுள்ள மண்கட்டி தெப்பக்குளம், வீரசூடாமணிக் கண்மாய்களில் தேங்கியுள்ள கழிவுநீர், பள்ளி வளாகத்தையொட்டி செல்லும் கழிவு நீரோடைக் கால்வாய் ஆகியவற்றிலிருந்து வரும் கொசுக்களே இதற்குக் காரணம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலூர் நகராட்சி ஆணையர் சுருளிநாதன், மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன் மற்றும் மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில் உத்தரவின் பேரில் சுகாதாரக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.  பள்ளி வளாகத் தூய்மை குறித்து ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமார் தலைமையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

பள்ளி இடைவேளையின்போது சுகாதாரமற்ற தின்பண்டங்கள், ஐஸ் உள்ளிட்டவைகளை மாணவர்கள் வாங்கிச் சாப்பிட்டதே உடல்நலக்குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments