FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வருகிறது புதிய விதிமுறை! இனி இந்த செல்போன்களில் வாட்ஸ்ஆப், டெலிகிராம் இயங்காது!

வருகிறது புதிய விதிமுறை, இனி இந்த செல்போன்களில் வாட்ஸ்ஆப், டெலிகிராம் இயங்காது என்பதுபற்றி..

இந்த செல்லிடப்பேசிகளில் ஜன.1 முதல் வாட்ஸ்அப் இயங்காது
பகிர்:

மத்திய அரசின், சிம்-பிணைப்பு விதிமுறை நடைமுறைக்கு வரவிருப்பதால் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் பயனர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

அதாவது, நாட்டில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்த, தங்களின் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை செல்போனில் வைத்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

இதுவரை, செல்போனில் உரிய சிம்கார்டுகள் இல்லாமல், அந்த எண்ணில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. இனி அந்த வாய்ப்பு கிடைக்காது.

Advertisement

Advertisement

தொலைத்தொடர்புத் துறை, செயலி அடிப்படையிலான தகவல் தொடர்புச் சேவைகளை, வாடிக்கையாளரின் தரவுகள் சரிபார்க்கப்பட்ட சிம் கார்டுகளுடன் கணக்குகளை இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள், ஒரு செல்போன் எண்ணுக்கும் அதில் பதிவு செய்யப்பட்ட கணக்குக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம், வெறும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி, எந்த செல்போனிலும் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற செய்திப் பரிமாற்றச் சேவைகளை மோசடிகளுக்கும், தவறான நோக்கங்களுக்கும் பயன்படுத்துவது சாத்தியமாகாது.

இந்த விதிமுறைகளின் கீழ், பதிவு செய்யப்பட்ட சிம் கார்டு இல்லாமல் வைஃபையை பயன்படுத்தி, செல்போன்களில் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்றவற்றை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாருக்கு பாதிப்பு?

பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை செல்போனில் பொருத்தாமல், ஆனால், அந்த சிம் கார்டு எண்ணை மட்டும் ப வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் செயலிகளுக்குப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை இந்த விதிமுறைகள் பாதிக்கக்கூடும்.

தற்போது, ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கும் இந்த சிம் பைண்டிங் வாய்ப்பு வந்துவிடும். ஒரு ஐபோனில் சிம் கார்டு இல்லாதபோது அதைக் கண்டறிய உதவும் வகையில், சிம் பைண்டிங்கை ஆதரிப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் iOS-இல் மாற்றங்களைச் செய்துள்ளது, இதற்கென செப்டம்பர் மாதம் ஒரு மென்பொருள் புதுப்பிப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இது எந்த வகையில் பயனர்களை பாதிக்கும் என்பது, இதனை செயல்படுத்தும் விதத்தைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments