மதுரையில் அரசியல் கட்சி பேனர், விளம்பரத் தட்டிகள் அகற்றம்
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து மதுரையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து மதுரையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பேனர்கள், விளம்பரத் தட்டிகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்த விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் வைக்க அனுமதியில்லை. அதையடுத்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவின்பேரில் யா.ஒத்தக்கடை பகுதியில் தேர்தல் அலுவலர்களால் விளம்பரப் பேனர்கள் அகற்றப்பட்டன. அதேபோல, பல்வேறு இடங்களிலும் இருந்த அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் நலத் திட்டங்கள் தொடர்பான பேனர்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அகற்றப்பட்டன.
குழு அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு: பேரவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களிலும் பணியாற்றக்
Advertisement
Advertisement
கூடிய வட்டாட்சியர் முதல் கிராம உதவியாளர் வரையிலும், காவல் துறையினருக்கும் பணி ஒதுக்கீடு உத்தரவுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.