திருமங்கலத்தில் மாவட்ட கராத்தே போட்டி
திருமங்கலத்தில் மாவட்ட அளவிளான கராத்தே போட்டி பி.கே.என். வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமங்கலத்தில் மாவட்ட அளவிளான கராத்தே போட்டி பி.கே.என். வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டபுள்யூ.டி.எஸ் கராத்தே பெஃடரேசன் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு பள்ளி முதல்வர் எஸ்.ஷர்மிஸ்தா, பள்ளித் தலைவர் பி.அன்புதயாளன் ஆகியோர் தலைமை வகித்தனர். பெஃடரேசன் தலைவர் எல்.பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் ஜி.பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இப்போட்டியில் 32 பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கட்டா மற்றும் குமிட்டே போன்ற சண்டை பிரிவுகளின் பெயரில் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிளான போட்டிக்கு தகுதி பெற்றனர். பெஃடரேசன் செயலாளர் டி.கண்ணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக தொழில்நுட்ப இயக்குநர் எம்.மணிகண்டன் வரவேற்றார். பொருளாளர் எ.பொன்னுசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.