FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஜினி அதிமுக தொண்டராக சேர்ந்து தலைவராகட்டும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

நடிகர்கள் ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவில் தொண்டராகச் சேர்ந்து பணியாற்றி, கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டால்

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

நடிகர்கள் ரஜினி, கமல் என யாராக இருந்தாலும் அதிமுகவில் தொண்டராகச் சேர்ந்து பணியாற்றி, கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டால் தலைவராக உயரலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
 மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அதில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
ரேஷன்கடை ஊழியர்கள் போராட்டம் எதிர்க்கட்சிகளால் தூண்டப்படுகிறது. ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கையை மனுவாக அமைச்சர் என்ற முறையில் என்னிடம் இதுவரை வழங்கவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு கோரிக்கை வைக்காமலே மருத்துவக் காப்பீடு திட்டம், ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் செயல்படுவது அவசியம். 
  அதிமுகவில் சிறப்பாக பணியாற்றி, விசுவாசமாக செயல்பட்டால் பதவிகள் தானாக வந்துசேரும்.  அதிமுகவில் சேரும் இளைஞர்களுக்கு பொறுப்புகள், பதவிகள் வர வாய்ப்பு உள்ளது. 
மதுரை திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும். 
நடிகர்கள் ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு வரலாம். கட்சியில் இணைந்தவுடன் தலைவர்களாக முடியாது. தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து, கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டால் மட்டுமே தலைவராகலாம். கட்சியில் உயர் பொறுப்புக்கு வரலாம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments