ரயிலில் இருந்து விழுந்து இளம் பெண் சாவு
மதுரை அழகப்பன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அழகப்பன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அழகப்பன் நகர் ரயில்வே கடவு பகுதியில் சற்றுத்தொலைவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்தத் தகவலின்பேரில் மதுரை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் நிறுவன ஊழியர் போல சீருடை அணிந்த நிலையில் இருந்த அந்த பெண், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயிலில் பயணம் செய்த போது படியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். மேலும் இறந்த பெண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர், ரயிலில் பயணம் செய்தவரா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.