FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விஷம் வைத்து 45 மயில்கள் சாகடிப்பு: உடல் உறுப்புகள் பரிசோதனை

மதுரை அருகே கொடிக்குளம் கண்மாயில் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட மயில்களின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மதுரை அருகே கொடிக்குளம் கண்மாயில் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட மயில்களின் உள் உறுப்புகள் பரிசோதனைக்காக ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
மதுரை அருகே உள்ள கடச்சனேந்தல் மருதங்குளம் கண்மாய் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து சனிக்கிழமை இறந்து கிடந்தன. தகவலின்பேரில் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் பாலகிருஷ்ணன், சுகன்யா உள்ளிட்டோர் மயில்கள் இறந்த கிடந்த பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.  இதில் விஷம் கலந்து நெற்கதிர்களை உட்கொண்டதால் 9 ஆண்மயில்கள், 34 பெண் மயில்கள் இறந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து இறந்து கிடந்த மயில்களை வனத்துறையினர் தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதைத்தொடர்ந்து மயில்களின் உள்உறுப்புகள் எடுக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. 
இதுகுறித்து  வனத்துறையினர் கூறியது: முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மயில்களின் உடல் உள் உறுப்புகள் அகற்றப்பட்டு அவை சென்னையில் உள்ள கால்நடை பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.  மேலும் அங்கு கிடந்த நெற்கதிர்களும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளில் மயில்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும். 
மேலும் மயில்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அப்பகுதியில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மயில் தோகையால் செய்யப்பட்டும் அலங்காரப்பொருள்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதால், மயில்களின் வண்ணத்தோகைகளுக்காக அவை விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம் என்றனர். 
இதற்கிடையே கொடிக்குளம் பகுதியில் சனிக்கிழமை மாலையில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்ததாக கூறப்படும் 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments