FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை, உசிலம்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மின்வாரியத்தின் மதுரை நகர் தெற்கு கோட்டம் மற்றும் உசிலம்பட்டி செயற்பொறியாளர்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மின்வாரியத்தின் மதுரை நகர் தெற்கு கோட்டம் மற்றும் உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை  (டிச. 20) காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
மதுரை மின்பகிர்மான வட்ட பெருநகர் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் மதுரை நகர் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக் கூட்டத்தில் சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச் சங்கம் சாலை, யானைக்கல், டவுன்ஹால்,  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மாகாளிப்பட்டி, திருமலை நாயக்கர் மகால், ஜான்சி ராணிப் பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் பங்கேற்கலாம் என செயற்பொறியாளர் ரெ.சுஜா தெரிவித்துள்ளார். அதேபோல, உசிலம்பட்டியில் நடைபெறும் மின்நுகர்வோர் கூட்டத்தில் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீடா பத்மினி பங்கேற்கிறார்.  உசிலம்பட்டி கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments