FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசுப் பேருந்து விபத்து: 19 பேர் காயம்

மதுரை மாவட்டம் மாங்குளம் அருகே அரசுப்பேருந்தும், சரக்கு வேனும் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலத்த காயமடைந்தனர்.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மதுரை மாவட்டம் மாங்குளம் அருகே அரசுப்பேருந்தும், சரக்கு வேனும் புதன்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் 19 பேர் பலத்த காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து மாங்குளம் வழியாக அழகர்கோவிலுக்கு அரசு நகரப்பேருந்து புதன்கிழமை சென்றது. கிடாரிப்பட்டி பெரியார் பாசனக் கால்வாய் கரையில் சென்றபோது,  வள்ளாளபட்டியில் இருந்து விவசாய பணிக்காக தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வேனும், அரசுப்பேருந்தும்  நேருக்குநேர் மோதிக்கொண்டன. விபத்தில் வள்ளாளபட்டியை சேர்ந்த அய்யம்மாள்(35), பொன்னழகு(22),  சொர்ணம்(20), நாச்சி ஆகிய பெண்கள் உள்பட 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். அப்பகுதியினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments