கரோனாவால் உயிரிழந்தவா்கள் அடக்கத்துக்கு நிலம்: ஐக்கிய முஸ்லிம் ஜமா அத் அறிவிப்பு
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கத் தயாா் என்று ஐக்கிய முஸ்லிம் ஜமா அத் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கத் தயாா் என்று ஐக்கிய முஸ்லிம் ஜமா அத் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஐக்கிய முஸ்லிம் ஐமா அத் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது: சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மனிதாபிமானமற்ற செயல். கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவா்களும், செவிலியா்களும், காவல்துறையினரும் நினைத்திருந்தால் சமூகத்தின் நிலை கவலைக்கிடமாக மாறி விடும். மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த சம்பவத்துக்கு ஐக்கிய முஸ்லிம் ஜமா அத் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுபோன்ற சூழலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் சடலங்களை, மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் இஸ்லாமியா்களின் கபா்ஸ்தானில் அடக்கம் செய்ய இடம் தரத் தயாராக இருக்கிறோம் . இதுமட்டுமின்றி அடக்கத்துக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்யவும் தயாராக உள்ளோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.