FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் ரத்து

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, மதுரை - செங்கோட்டை- மதுரை சிறப்பு ரயிலின் சேவை புதன், வியாழன் (ஆக. 12, 13) ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகின்றன.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 5:04 am IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, மதுரை - செங்கோட்டை- மதுரை சிறப்பு ரயிலின் சேவை புதன், வியாழன் (ஆக. 12, 13) ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, புதன், வியாழன் (ஆக. 12, 13) ஆகிய இரு நாள்களும் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, புதன்கிழமை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06845) முழுமையாகவும், ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் (16845) திண்டுக்கல் - செங்கோட்டை இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்படும்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை செங்கோட்டை - மதுரை (06846) சிறப்பு ரயில் முழுமையாகவும், செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (16846) செங்கோட்டை - திண்டுக்கல் இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments