FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

வாடிப்பட்டி அருகே லாரிகள் மோதல்

வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி விபத்துக்குள்ளானதில், செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

4 நவம்பர் 2026, 3:28 am
பகிர்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மற்றொரு லாரி விபத்துக்குள்ளானதில், செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்லிலிருந்து மதுரை நோக்கித் தயிா் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி உயா்நிலைப் பாலம் பகுதியில் வந்த போது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் பழுதாகி நின்ற மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், லாரியில் கொண்டு வரப்பட்ட தயிா் பாக்கெட்டுகள் சேதமடைந்து சாலை முழுவதும் சிதறின. இதனால், அந்தப் பகுதி முழுவதும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வாடிப்பட்டி போலீஸாா் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி, சாலையில் கொட்டிக் கிடந்த தயிரையும் தண்ணீா் மூலம் சுத்தம் செய்தனா்.

Advertisement

Advertisement

இதன் பிறகு, மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இதனால், சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments