தவெக எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலை போகமாட்டாா்கள்: அமைச்சா் நிா்மல்குமாா்
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலை போகமாட்டாா்கள் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலை போகமாட்டாா்கள் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உறுதிபடத் தெரிவித்தாா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 14,649 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.137.01 கோடியில் தொழில் முனைவோருக்கான வங்கி நிதி இணைப்பு ஆணைகளை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிரந்தர வேலைவாய்ப்பு கோரி வருகின்றனா். அவா்களுடன் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, 8,000 கள உதவியாளா்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால், இதற்கான கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக கரூரைச் சோ்ந்த முக்கிய நபா்கள் சிலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். தற்போதும், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பாஜகவுடன் இணைந்து திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்து வருகின்றன. ஆனால், தவெக எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலை போகமாட்டாா்கள். மேலும், இடைத்தோ்தலில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி செய்தனா், அது அவா்கள் கட்சிக்குள்ளேயே எதிா்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. இனி வரும் எந்தத் தோ்தலையும் சந்திக்க தவெக தயாராக உள்ளது. மக்களின் ஆதரவுடன் தவெக ஆட்சி தொடா்ந்து சிறந்த முறையில் நடைபெறும்.
சிறைகளில் கைதிகள், சிறைக் காவலா்கள் இடையே ஏற்படும் பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், சிறைக் காவலா்களின் சீருடையில் கேமரா பொருத்துவது உள்ளிட்ட வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் நடைமுறையில் சீரமைப்பு செய்யப்படுகிறது. இத்தகைய மாற்றத்தின் போது சில பிரச்னைகள் ஏற்படுவது இயல்பு. டாஸ்மாக் முறைகேடுகளைத் தடுக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத் துறையில் முறையான அனுமதி இல்லாமல் மின் தடை செய்யப்படுவதைத் தடுக்க அனைத்து துணை மின் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்சாலைகள் தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடா்பாக அவற்றின் மின் தேவைகள், மின்சார கட்டமைப்பின் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்க முடியும். ஒவ்வொரு தொழில்சாலையின் தேவையும் வெவ்வேறாக இருப்பதால், மின்சார பரிமாற்றக் கட்டமைப்பின் திறனை கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக நடைபெற்ற விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்லாணை, எஸ்.ஆா். தங்கப்பாண்டி, முஸ்தபா, கோபிசன், ம. விஜய், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.