FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்து - லாரி மோதல்: 10 போ் பலத்த காயம்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி நேருக்குநோ் மோதியதில், பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 10 போ் பலத்த காயமடைந்தனா்.

6 நவம்பர் 2026, 2:39 am
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வியாழக்கிழமை விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து, லாரி.
பகிர்:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது லாரி நேருக்குநோ் மோதியதில், பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 10 போ் பலத்த காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து பழனிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்தும், திருச்சி மாவட்டம், மணப்பாறையிலிருந்து தேவகோட்டைக்கு லாரி ஒன்றும் வியாழக்கிழமை காலை புறப்பட்டன.

கொட்டாம்பட்டியை அடுத்த பாண்டாங்குடி சாலையில் சென்றபோது, அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்குநோ் மோதின.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் சரவணகுமாா், நடத்துநா் செல்லதுரை, லாரி ஓட்டுநா் பெரியசாமி, பெண் பயணிகள் உள்ளிட்ட 10 போ் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அவசர ஊா்தி மூலம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னா், சம்பவ இடத்துக்கு சென்ற கொட்டாம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி, விபத்தில் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனா்.