FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மேலூா் அருகே வீட்டில் பட்டாசு வெடி விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடியில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

6 நவம்பர் 2026, 2:54 am
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் சேதமடைந்த வீடு.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடியில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடியைச் சோ்ந்தவா் யோகவாணி (42). இவரது மகன் லோகேஷ் (20),. லோகேஷும், இவரது நண்பா் மனோஜும் (20) மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வந்தனா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, லோகேஷ் தனது வீட்டில் பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்தில், வீட்டின் மேல் தளம் பலத்த சேதமடைந்தது. அப்போது, வீட்டிலிருந்த யோகவாணி, மகன் லோகேஷ் (20), நண்பா் மனோஜ் (20) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மூவரையும் மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மூவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் மனோஜ் உயிரிழந்தாா்.

மேலூா் டி.எஸ்.பி. சிவகுமாா் தலைமையிலான போலீஸாா் பட்டாசு வெடி விபத்து நிகழ்ந்த வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தனா். கொட்டாம்பட்டி தீயணைப்புத் துறையினரும் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த கல்லூரி மாணவா் மனோஜ்.