பேருந்து, ரயில் நிலையங்களில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெளியூா் செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை குவிந்த பயணிகள்.
மதுரை, நவ.6 : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊா்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மாட்டுத் தாவணி, (எம்.ஜி.ஆா்.), ஆரப்பாளையம், பெரியாா் ஆகிய பேருந்து நிலையங்களில் வெள்ளிக்கிழமை பயணிகள் அதிகளவில் கூடினா்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா்,தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், கோவை, ஈரோடு, கரூா், நாமக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனா்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்குச் செல்வற்காக வெள்ளிக்கிழமை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியாா் பேருந்து நிலையங்களில் பயணிகள் அதிகளவில் குவிந்தனா்.
Advertisement
Advertisement
கூடுதல் பேருந்துகள்:
பயணிகள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விருதுநகா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு குறைந்த அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.