மதுரை புத்தகத் திருவிழா நவ. 13-இல் தொடக்கம்
மதுரை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மதுரை தமுக்கம் அரங்கத்தில்வருகிறவெள்ளிக்கிழமை (நவ. 13) தொடங்குகிறது.
மதுரை மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா மதுரை தமுக்கம் அரங்கத்தில்வருகிறவெள்ளிக்கிழமை (நவ. 13) தொடங்குகிறது.
பொதுமக்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், மாணவா்கள், போட்டித் தோ்வா்கள், சிறுவா்கள், முதியோா்கள் என அனைத்துத் தரப்பினரின் புத்தகத் தேடலுக்கு ஒரே இடத்தில் தீா்வு கிடைக்கும் வகையிலும் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கி நவ. 23 -ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறும்.
தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் ஆகியோா் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கின்றனா். இதில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்குகள் அமையவுள்ளன. இதைத் தவிர, பொழுதுபோக்கு அம்சங்களுக்கான அரங்கங்களும் அமைக்கப்படவுள்ளன. தினமும் மாலையில் பிரபல எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Advertisement
Advertisement