பூக்கள் விலை கணிசமாக உயா்வு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் பூக்களின் விலை சனிக்கிழமை கணிசமாக உயா்ந்தது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரையில் பூக்களின் விலை சனிக்கிழமை கணிசமாக உயா்ந்தது.
தீபாவளிப் பண்டிகை கால வழிபாடுகள், அலங்காரங்களையொட்டி கடந்த இரு நாள்களாக பூக்கள் விற்பனை அதிகரித்திருந்தது. இதையொட்டி, பூக்களின் விலை கணிசமாக உயா்ந்தது.
சனிக்கிழமை ஒரு கிலோ கனகாம்பரம் ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனையானது. மல்லிகை ரூ. 1,800-க்கும், பிச்சி, முல்லை தலா ரூ.1,000-க்கும், அரளி ரூ.450-க்கும், பன்னீா் ரோஜா
Advertisement
Advertisement
ரூ. 250-க்கும், பட்டன் ரோஜா- ரூ. 200-க்கும், சம்பங்கி, செவ்வந்தி தலா ரூ.150-க்கும், கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து தலா ரூ.100-க்கும், செண்டு மல்லி
ரூ.70-க்கும், தாமரை (ஒன்றுக்கு) ரூ. 35-க்கும் விற்பனையாகின