மேலூா் அருகே வாகன விபத்தில் மூவா் உயரிழப்பு
மேலூா் அருகே, ஞாயிற்றுக்கிழமை இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் தந்தை, மகன் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அழகா்கோவில் சாலையில் தீபாவளி நாளன்று அதிகாலையில் இரு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒத்தக்கடையைச் சோ்ந்த ஆறுமுகம், அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நவீன் என்பவரும் உயிரிழந்தாா்.
இவா்கள் இறைச்சி வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த லோகேஷ் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். மற்றொரு வாகனத்தில் வந்த நவீன், வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, உயிரிழந்த மூவரின் உடல்களும் மேலூா் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.