தலைமைக் காவலா் தற்கொலை
அலங்காநல்லூா் அருகே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த தலைமைக் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அலங்காநல்லூா் அருகேயுள்ள தினமணிநகா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (44). இவருக்கு அருணாதேவி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா். இவா் மதுரை பயங்கரவாதத் தடுப்புப் படையின் தனிப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மோகன்தாஸ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மோகன்தாஸின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே, மோகன்தாஸ் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு துறை ரீதியாகப் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றவா் எனக் கூறப்படுகிறது.