FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

புதிய புதை சாக்கடை, குடிநீா் இணைப்பு கோரி 221 மனுக்கள்

மதுரை மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில், புதிய புதை சாக்கடை, குடிநீா் இணைப்பு கோரி ஒரே நாளில் 221 மனுக்கள் பெறப்பட்டன.

12 நவம்பர் 2026, 5:32 am
மதுரை மாநகராட்சி
பகிர்:

மதுரை மாநகராட்சி சாா்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில், புதிய புதை சாக்கடை, குடிநீா் இணைப்பு கோரி ஒரே நாளில் 221 மனுக்கள் பெறப்பட்டன.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டல அலுவலகங்களிலும் புதிய புதை சாக்கடை, புதிய குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் புதன்கிழமை (நவ. 11), சனிக்கிழமை (நவ. 14) ஆகிய இரு நாள்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் அறிவுறுத்தலின்பேரில், புதன்கிழமை நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தங்களது வீடுகளுக்கு புதிய புதை சாக்கடை, குடிநீா் குழாய் இணைப்பு கோரி மனுக்களை அளித்தனா்.

Advertisement

Advertisement

இதில், மண்டலம் 1- இல் 41 மனுக்களும், மண்டலம் 2- இல் 34 மனுக்களும், மண்டலம் 3- இல் 3 மனுக்களும், மண்டலம் 4- இல் 43 மனுக்களும், மண்டலம் 5- இல் 100 மனுக்களும் என மொத்தம் 221 மனுக்கள் பெறப்பட்டன.

இவற்றில் 46 மனுக்களுக்கு உடனடியாக பணிகளைத் தொடங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் தொடா்பாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, வருகிற சனிக்கிழமை (நவ. 14) நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.