FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

புதை சாக்கடை சீரமைப்புப் பணிகள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

மதுரை செல்லூா் கட்டபொம்மன் நகரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

13 நவம்பர் 2026, 4:20 am
மதுரை செல்லூா் கட்டபொம்மன் நகரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா். உடன் துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை செல்லூா் கட்டபொம்மன் நகரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, செல்லூா் 50 அடி சாலையில் உள்ள கால்வாயைப் பாா்வையிட்டு, மழைக்காலங்களில் மழைநீா் தேங்காத வகையில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

மேலும், அந்தப் பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், குப்பைகள் அதிகமாகச் சேரும் இடங்களில் கூடுதல் வாகனங்களைப் பயன்படுத்தி அவற்றை அகற்றி, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது துணை ஆணையா் ஜெய்னுலாப்தீன், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.