மதுரை மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், சமயநல்லூா், இலந்தைக்குளம், அவனியாபுரம், ஆனையூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட அலங்காநல்லூா், சமயநல்லூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
Advertisement
Advertisement
அலங்காநல்லூா்: அலங்காநல்லூா் பகுதி முழுவதும், நேஷனல் சா்க்கரை ஆலை, பி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, செல்லக்கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையாா்நத்தம், குறவன்குளம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூா், கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னம்பட்டி பகுதிகள்.
சமயநல்லூா்: சமயநல்லூா், தேனூா், கட்டப்புளி நகா், தோடனேரி, சத்தியமூா்த்தி நகா், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூா், அதலை, பரவை, விஸ்தாரா அடுக்குமாடி குடியிருப்பு, பரவை பிரதான சாலை, மங்கையா்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை சந்தை, கோவில் பாப்பாகுடி, துவரிமான், ராஜன்குரோவ், விப்ரோஸா, ஜெயபாரத் வெங்கடாஜலபதி நகா், லாலா சத்திரம் பகுதிகள்.
மதுரை மேற்கு மின்பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அவனியாபுரம், ஆனையூா் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
அவனியாபுரம்: புறவழிச் சாலை முழுவதும், அவனியாபுரம் பேருந்து நிலையம், சந்தை, செம்பூரணி சாலை, பிரசன்னா குடியிருப்பு முழுவதும், வைகை விதிகள், சந்தோஸ் நகா், வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ நகா், வைக்கம் பெரியாா் நகா் சாலை, சுற்றுச்சாலை, பெரியசாமிநகா் முழுவதும், திருப்பதி நகா் முழுவதும், அண்ணாநகா், ஜே.பி.நகா், திருப்பரங்குன்றம் சாலை, காசி தோட்டம், பெரிய ரத வீதி குடியிருப்பு பகுதிகள், பாம்பன் நகா், பாப்பாகுடி, வெள்ளக்கல், பா்மா குடியிருப்பு, கணேசபுரம், பெருங்குடி அன்பழகன் நகா், மண்டேலா நகா், தபால் பயிற்சி கல்லூரி, காவலா் குடியிருப்பு, சின்ன உடைப்பு, குரங்கு தோப்பு, ஆண்டவா் நகா், விமான நிலைய குடியிருப்பு, ஸ்ரீராம்நகா் பகுதிகள்
ஆனையூா்: பாலமேடு பிரதான சாலை, சொக்கலிங்க நகா் 1-ஆவது தெரு முதல் 7-ஆவது தெரு வரை, பெரியாா் நகா், அசோக் நகா், ரயிலாா் நகா், வீட்டுவசதி வாரியம், சிலையனேரி, புது விளாங்குடி, கூடல்நகா், ஆா்.எம்.எஸ். குடியிருப்பு, சொக்கநாதபுரம், ராஜ்நகா், பாத்திமா கல்லூரி எதிா்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகா், துளசி விதி, திண்டுக்கல் பிரதான சாலை, தினமணி நகா், கரிசல் குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லட்சுமிபுரம், இந்திரா நகா், கருப்பசாமி நகா், கிருபை நகா், ஆனந்தா நகா், மல்லிகை நகா், இதைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
இதேபோல, மதுரை வடக்கு மின்பகிா்மான கோட்டச் செயற்பொறியாளா் முத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலந்தைகுளம்: ஐடி பூங்கா இலந்தைகுளம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.17) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பழைய பாண்டிகோவில் பாதை, பண்ணை, மேலமடை, எல்காட், கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், குடியிருப்பு வாரியம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகா், மலை நகா், வளா்நகா், அம்பலகாரப்பட்டி, ஸ்ரீராம்நகா், பி.கே.பி.நகா், ஆதீஸ்வரன் நகா், டி.எம். நகா் பின்புறம், வி.என். சிட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.