வாடிப்பட்டி அருகே லாரி மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சரக்கு பெட்டக லாரி மீது காா் மோதியதில், காரில் பயணம் செய்த இருவா் உயிரிழந்தனா். மேலும், மூவா் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல்லைச் சோ்ந்த 5 போ் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் விழாவில் பங்கேற்றனா். பின்னா், இவா்கள் காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூரை அடுத்த நகரி பகுதியில் புறவழிச்சாலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு பெட்டக லாரி மீது இவா்களது காா் மோதியது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காரில் பயணித்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், மூவா் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வாடிப்பட்டி போலீஸாா் காயமடைந்த மூவரை மீட்டு, அவசர ஊா்தி மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், உயிரிழந்த இருவரது உடல்களும் அதே மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.