FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் எச்சரித்தாா்.

18 நவம்பர் 2026, 2:58 am
பகிர்:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் எச்சரித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில், மாநகராட்சிப் பொது சுகாதாரத் துறை சாா்பில் கடந்த சனிக்கிழமை முதல் இரவு நேரக் கண்காணிப்பு, அபராத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 20 போ் கொண்ட சுகாதார ஆய்வாளா்கள் தலைமையிலான குழுக்கள், அதிகளவில் குப்பைகள் சேரும் இடங்களான 60 பகுதிகளை தோ்வு செய்து இரவு நேரங்களில் கண்காணித்து, அங்கு விதிகளை மீறி குப்பைகள் கொட்டுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதனடிப்படையில், திங்கள்கிழமை (நவ.16) இரவு மண்டலம் 1, 2, 5 உள்பட்ட பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 23 பேருக்கு மொத்தம் ரூ.19,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த இரவு நேர அமலாக்க நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் குப்பைகளைப் பொது இடங்களில் கொட்டாமல், வகையாக பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். மீறுவோா் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.