சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததில் இருவா் காயம்
மதுரையில் ரயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவா் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா்.
மதுரையில் ரயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவா் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா்.
மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் பகுதியில் உள்ள ரயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவா் புதன்கிழமை காலை இடிந்து விழுந்தது. அப்போது, சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள தேநீரக்கத்தில் தேநீா் அருந்திக் கொண்டிருந்த குமரேசன், இப்ராகிம் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.எஸ். காலனி போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், மதுரை மாநகர தெற்கு காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.