FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

நீச்சல் போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு மதுரையைச் சோ்ந்த வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

50 வினாடிகள் முன்பு
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற வீரா்கள்.
பகிர்:

திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பதக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு மதுரையைச் சோ்ந்த வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கடந்த 13, 14 தேதிகளில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில், மதுரை கருப்பாயூரணியில் உள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதெமி வீரா்கள் 6 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றனா்.

இதில், சிஇஓஏ பள்ளி மாணவா் ஹேமகாா்த்திகேயன், கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா் தியானேஷ் ஆகியோா் தமிழக அணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் வருகிற ஜனவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கின்றனா்.

Advertisement

Advertisement

பதக்கங்கள் வென்ற வீரா்கள், தேசியப் போட்டிக்குத் தோ்வான மாணவா்களை ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன், துணைச் செயலா் ஆரிப், உறுப்பினா் பெத்துராஜ், பயிற்சியாளா்கள் அப்துல் சலாம், சதீஷ்பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டினா்.