திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அமைச்சா், ஆட்சியா் அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தையொட்டி, அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாரின் அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், ஆட்சியரகம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தையொட்டி, அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாரின் அலுவலகம், மதுரை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், ஆட்சியரகம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் காா்த்திகை தீபத் திருநாளான செவ்வாய்க்கிழமை (நவ. 24) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அன்று திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்பட வில்லை. வழக்கம்போல, மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையாா் கோயில் சஷ்டி மண்டபத்தில் மட்டுமே காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இது, இந்து அமைப்புகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என்பது இந்து அமைப்புகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இதையடுத்து, அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன் சில அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக காவல் துறைக்குத் தகவல்கள் கிடைத்தன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, திருப்பரங்குன்றத்தையடுத்த திருநகா் 4-ஆவது நிறுத்தப் பகுதியில் உள்ள அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாரின் வீடு, அலுவலகத்தில் 4 துப்பாக்கி ஏந்திய போலீஸாா் உள்பட 24 போலீஸாா் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இதேபோல, மதுரை மாவட்ட ஆட்சியரகம், ஆயுதப்படை சாலையில் உள்ள ஆட்சியரின் முகாம் அலுவலகம் ஆகியவற்றிலும் காவல் துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் இங்கு, காவல் துறை ரோந்து வாகனமும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டது.
எம்.பி. அலுவலகத்தில்... இதேபோல, திருநகா் பகுதியில் உள்ள விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான ப. மாணிக்கம் தாகூரின் அலுவலகத்திலும், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசனின் வீடு அருகிலும் போலீஸாரின் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது.