திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல 3-வது நாளாக தடை.. தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு!
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைக்குச் செல்ல 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருநாளையொட்டி கோயில் சார்பில் மலை மீதுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணிலேயே கார்த்திகை தீபத்தை ஏற்றுவது முந்தையக் கால வழக்கம் எனவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் வழக்கமான நடைமுறைப்படி செவ்வாய்க்கிழமை (நவ. 24) மாலை உச்சிப் பிள்ளையார் கோயில் சஷ்டி மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
Advertisement
Advertisement
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணித்து திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றக் கோரி நேற்று (நவ. 25) முன்தினம் போராட்டம் நடத்திய பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்காக பக்தர்கள் மலைக்கு மேல் செல்ல 3-ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலையைச் சுற்றி தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
For the third consecutive day, access to the hill at the Subramanya Swamy Temple in Tirupparankundram has been prohibited. Furthermore, the police have set up barricades and are engaged in security duties.