திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!
திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல இரண்டாவது நாளாக இன்றும் (நவ. 25) தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றக் கோரி நேற்று போராட்டம் நடத்திய பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த 300 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சட்டம் ஒழுங்கு பிரச்னை மற்றும் கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்காக பக்தர்கள் மலைக்கு மேல் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மலையைச் சுற்றி தடுப்புகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.