திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது குறித்து...

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் திங்கள்கிழமை (நவ. 23) போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, நாளை கார்த்திகை திருவிழாவின் முக்கிய விழாவான மலை மேல் மகா தீபம் ஏற்றும் விழா நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இடைக்கால அனுமதியை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் அரசு தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு மலைக்கு செல்லும் பாதையில் பழனி ஆண்டவர் கோவில் வாசல் மற்றும் நுழைவாயில் பகுதிகளில் பிரம்மாண்ட ஆறடி உயரமுள்ள தடுப்பு பேரிகேடுகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.