மாநில நீச்சல் போட்டியில் வென்ற மாணவிகளுக்குப் பாராட்டு
மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாவட்டம், க.பெருமாள்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா்.

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மதுரை மாவட்டம், க.பெருமாள்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா்.
திருநெல்வேலியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி அண்மையில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டியில் உள்ள அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயது பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றனா்.
Advertisement
Advertisement
வெற்றிபெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் க. ஜெயக்கொடி முன்னிலை வகித்தாா்.
உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வென்ற மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், பள்ளி கடந்தாண்டு நடைபெற்ற அரசு பொதுத்தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற்கு பாடுபட்ட ஆசிரியா், ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், உடல்கல்வி ஆசிரியா் ராஜேந்திரன், ஆசிரியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.