மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.23 கோடி
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.23 கோடி கிடைத்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.23 கோடி கிடைத்தது.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், அதன் 10 துணைக் கோயில்களின் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், கோயில் செயல் அலுவலரும், அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ் தலைமையில், அறநிலையத் துறை உதவி ஆணையா் இரா. முத்துராமலிங்கம் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ரொக்கமாக ரூ. 1.23 கோடியும், பலமாற்று பொன் இனங்கள் 365 கிராமும், பலமாற்று வெள்ளி இனங்கள் 548 கிராமும், அயல்நாட்டு பணத்தாள்கள் 171-ம் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றன.
Advertisement
Advertisement