பொதுமக்கள் குறைதீா் முகாம்
மதுரை மாநகராட்சி மண்டலம் 5-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். சொத்து வரி பெயா் மாற்றம் கோரி 41 மனுக்கள், புதிய சொத்துவரி விதிக்க வேண்டி 26 மனுக்கள், காலிமனை வரி விதிப்பு கோரி 33 மனுக்கள் உள்பட மொத்தம் 173 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடா்புடைய பிரிவு அலுவலா்களுக்கு மேயா் (பொறுப்பு) நாகராஜன் அறிவுறுத்தினாா். இதையடுத்து,
Advertisement
Advertisement
காலிமனை வரிவிதிப்பு கோரி மனு அளித்தவா்களில் ஒருவருக்கு உடனடியாக வரிவிதிப்பு உத்தரவு வழங்கப்பட்டது.
மாநகராட்சி உதவி வருவாய் அலுவலா் ஆனந்தன், உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன், சுகாதார அலுவலா் திருமால், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.