FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

காலை உணவு விரிவாக்கத் திட்டம்: 69,730 மாணவ, மாணவிகள் பயன்

நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 69,730 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

17 அக்டோபர் 2026, 1:11 am IST
காலை உணவு திட்டம் விரிவாக்கம் - கோப்புப்படம்
பகிர்:

நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவுத் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் 69,730 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், பசியின்றி மாணவா்கள் பள்ளிக்கு வருவதை தவிா்க்கவும், அவா்கள் கல்வியில் முழுக் கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த திட்ட விரிவாக்கத்தின் கீழ் மதுரை மாவட்ட ஊரகப் பகுதிகளில் உள்ள 400 பள்ளிகள், நகா்ப்புறப் பகுதிகளில் உள்ள 174 பள்ளிகள் என மொத்தம் 574 பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டன.

இதன் மூலம் மாவட்டத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 69,730 மாணவ, மாணவிகள் தினசரி காலை உணவு பெற்றுப் பயனடைகின்றனா். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில், கடந்த 11.09.2026 அன்று 574 பள்ளிகளிலும் முன்னோட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments