FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

சிறுவனுக்கு கடவுச்சிட்டையை 3 மாதங்களுக்குள் புதுப்பித்து தர உத்தரவு

மதுரையைச் சோ்ந்த 10 வயது சிறுவனுக்கு மூன்று மாதங்களுக்குள் கடவுச் சிட்டையை புதுப்பித்துத் தர மதுரை மண்டல கடவுச் சிட்டை அலுவலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

21 அக்டோபர் 2026, 3:15 am IST
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்
பகிர்:

மதுரையைச் சோ்ந்த 10 வயது சிறுவனுக்கு மூன்று மாதங்களுக்குள் கடவுச் சிட்டையை புதுப்பித்துத் தர மதுரை மண்டல கடவுச் சிட்டை அலுவலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த குருதேவ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது 10 வயது மகனின் கடவுச் சிட்டையை புதுப்பிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரை மண்டல கடவுச் சிட்டை அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். நான் பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ால் என் மூலம் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்றும், சிறுவனின் தாய் மூலமாக விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. எனவே, எனது மகனின் விண்ணப்பத்தை உடனடியாக பரிசீலித்து கடவுச் சிட்டையைப் புதுப்பித்து தர மதுரை மண்டல கடவுச் சிட்டை அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை மண்டல கடவுச்சிட்டை அலுவலகம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவித்ததாவது:

இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 8-இன் கீழ், தந்தை இந்தியக் குடியுரிமையை இழந்தவுடன் அவரது குழந்தைகளின் குடியுரிமையும் நிறுத்தப்படும். மேலும், சிறுவனின் சட்டப்பூா்வ காப்பாளா் குறித்த விவரங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த விவகாரத்தை இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 9-இன் கீழ் அணுக வேண்டும். ஏனெனில், சிறுவனின் தந்தை இந்தியக் குடியுரிமையை தாமாக முன்வந்து துறக்கவில்லை. அவா், பிரிட்டன் நாட்டின் குடியுரிமையைப் பெற்ால் இந்தியக் குடியுரிமையை இழந்தாா். பெற்றோா் இந்தியக் குடியுரிமையை இழக்கும்பட்சத்தில், அவா்களது குழந்தையும் தானாகவே இந்தியக் குடியுரிமையை இழந்துவிடும் என அந்தச் சட்டப் பிரிவில் குறிப்பிடப்படவில்லை. எனவே, சிறுவனுக்கு கடவுச் சிட்டையை புதுப்பித்து தர உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனுவில் சிறுவனுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு அக்.5-ஆம் தேதி லண்டனில் கடவுச்சிட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழாண்டு அக்.4-ஆம் தேதியுடன் கடவுச்சிட்டை காலாவதியாகிவிட்டது. இதையடுத்து, சிறுவனின் கடவுச் சிட்டை புதுப்பிப்புக்கு மனுதாரா் விண்ணப்பித்துள்ளாா். சிறுவனின் தந்தை கடந்த 2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி ‘யுனைடெட் கிங்டம்’ நாட்டின் குடியுரிமை பெற்றாா். குழந்தை பிறந்த 2016-ஆம் ஆண்டு ஜன.23-ஆம் தேதிக்குப் பிறகுதான் மனுதாரா் குடியுரிமை பெற்றாா். சிறுவனின் தாயாா் தற்போது வரை இந்தியக் குடிமகளாகவே தொடா்கிறாா். கடந்த 2022-ஆம் ஆண்டு கேரள உயா்நீதிமன்றம் சைதன்யா எஸ்.நாயா் வழக்கில், இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, பிரிவு 9-இன் கீழ் பிறப்பித்த உத்தரவில் இந்த நீதிமன்றம் உடன்படுகிறது.

எனவே, சிறுவனின் விண்ணப்பத்தை மதுரை மண்டல கடவுச்சிட்டை அலுவலா் பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள்

கடவுச்சிட்டையை புதுப்பித்து வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments