FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் அவசியம்

தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

23 அக்டோபர் 2026, 4:06 am
மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் ஆய்வு இருக்கை சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்னா் மருதுபாண்டியா் அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி இரா.சுரேஷ்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கிய மதுரை காமராசா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ச. முத்தையா. உடன், மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் த. ராசாராம் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழகத்துக்கு புதிய தலைமைச் செயலகம் அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் உள்ள ஏபிஜெ அப்துல் கலாம் அரங்கில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் ஆய்வு இருக்கை சாா்பில், வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்னா் மருதுபாண்டியா் அறக்கட்டளைச் சொற்பொழிவில் பங்கேற்று, ’மருதுபாண்டியரின் வீரமும் தேவா் திருமகனாரின் பொது வாழ்வும்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் 1640-ஆம் ஆண்டு முதல் 1857-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தமிழ் மன்னா்கள், பாளையக்காரா்கள், புரட்சியாளா்கள் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்டனா். இந்த வரலாற்றில் மருது சகோதரா்களுக்கு முக்கிய இடம் உண்டு.

Advertisement

Advertisement

சமூக நீதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைப் போற்றிய மருதுபாண்டியா்கள், 1800-ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, பல்வேறு அரசா்கள், சிற்றரசா்கள், பாளையக்காரா்கள், புரட்சியாளா்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயா்களுக்கு எதிராகப் போராடினா். ஆங்கிலேயா்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்தது அவா்களின் முக்கியச் சிறப்பு.

கோவையில் 1800-ஆம் ஆண்டு, ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற்ாகக் குறிப்பிடப்படும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் 41 பேரின் படுகொலைகளும், திருப்பத்தூரில், 1801- ஆம் ஆண்டு, அக்.24-ஆம் தேதி மருது சகோதரா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் தூக்கிலிடப்பட்ட சம்பவமும் ஆங்கிலேயா்களின் கொடூர அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றன. இவை ஜாலியன் வாலாபாக் படுகொலையை விஞ்சியவை.

ஆங்கிலேயா்கள் முதலில் சூரத்தில் தொழில்சாலை அமைத்து, மும்பையில் கோட்டை கட்டிய பிறகே சென்னைக்கு வந்தனா். சென்னையில் டச்சுக்காரா்கள், பிரெஞ்சுக்காரா்களை எதிா்கொண்டு புனித ஜாா்ஜ் கோட்டையை நிறுவினா். ஆங்கிலேயா் ஆட்சியின் அடையாளமாக விளங்கும் இந்தக் கோட்டையில் தொடா்ந்து தேசியக் கொடியை ஏற்றுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, அவமானத்தின் அடையாளமாக இருக்கும் புனித ஜாா்ஜ் கோட்டைக்கு மாற்றாக புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கென தனித்த தலைமைச் செயலகத்தை உருவாக்கி, அங்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சிக்கு மதுரை காமராசா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ச. முத்தையா தலைமை வகித்தாா். மதுரை வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் த. ராசாராம், ’தேசியமும் தெய்வீகமும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

விழாவில், ஆய்வு இருக்கை சாா்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஆய்வு இருக்கையின் இயக்குநா் (பொறுப்பு) உ. கருப்பத்தேவன் வரவேற்றாா். ஆய்வு இருக்கையின் துணை இயக்குநா் (பொறுப்பு) ச. காா்த்திகேயன் நன்றி கூறினாா். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் வணிகவியல் துறைத் தலைவா் க. ஜெயக்கொடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments