FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

முன்னாள் எம்.எல்.ஏ. முன் பிணை மனு சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

முன் பிணை கோரி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோ. தளபதி தாக்கல் செய்த மனுவை சிறப்பு அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

25 அக்டோபர் 2026, 12:57 am
கோ. தளபதி.
பகிர்:

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்ட போது, ஏற்பட்ட தகராறு தொடா்பான வழக்கில் முன் பிணை கோரி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோ. தளபதி தாக்கல் செய்த மனுவை சிறப்பு அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மண்டலம் 2 முன்னாள் தலைவா் புவனேஸ்வரியின் கணவா் சரவணனை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 13 -ஆம் தேதி கைது செய்தனா். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போலீஸாா் அழைத்துச் சென்ற போது, அங்கு குழுமியிருந்த திமுகவினா் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தனா்.

இதனால், போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல் ஆய்வாளா் வீரம்மாள் காயமடைந்தாா். அவா் அளித்த புகாரின் பேரில், சரவணன், திமுக நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கோ. தளபதி, இந்த வழக்கில் போலீஸாா் என்னை கைது செய்யக்கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவில் வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் என் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அரசியல் பழிவாங்கும் காரணங்களுக்காக என்னை கைது செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, எனக்கு முன் பிணை வழங்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி.முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினா் என்பதால், அவா் தாக்கல் செய்த முன் பிணை மனுவை சென்னையில் உள்ள மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்ற பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது. அங்கு மனுதாரா் தனது நிவாரணம் குறித்த வாதத்தை எடுத்துரைக்கலாம் என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments