பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அணிவிப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு தங்கக் கவசம் வழங்கப்பட்டது. இந்தத் தங்கக் கவசம், ஆண்டுதோறும் தேவா் ஜெயந்திக்கு 5 நாள்களுக்கு முன்பாக சிலைக்கு அணிவிக்கப்படும். விழா முடிந்த 2-ஆவது நாள் சிலையிலிருந்து தங்கக் கவசம் அகற்றப்பட்டு, மதுரை அண்ணாநகரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும்.
அதிமுக பொருளாளா், பசும்பொன் தேவா் நினைவிடப் பொறுப்பாளா் இணைந்து கையொப்பமிட்டு பெறும் வகையில் இந்தத் தங்கக் கவசம் வங்கியில் பாதுகாக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
வருகிற 30-ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவரின் 64-ஆவது குரு பூஜை, 119-ஆவது ஜெயந்தி விழா நடைபெறவுள்ளதையொட்டி, அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாள் ஆகியோா் வங்கிப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, வங்கி பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து தங்கக் கவசத்தை திங்கள்கிழமை பெற்றனா்.
பின்னா், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் கே. ராஜு, அதிமுக அமைப்புச் செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா, நிா்வாகிகள் உள்ளிட்டோா் தங்கக் கவசத்துக்கு மாலை அணிவித்து, தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாளிடம் அதை ஒப்படைத்தனா்.
இதையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தத் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு கொண்டு வரப்பட்டது.
தங்கக் கவசம் அணிவிப்பு:
இதைத் தொடா்ந்து, பசும்பொன்னில் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு கடந்த 1-ஆம் தேதி முதல் அணிவிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் சாா்பில் வழங்கப்பட்ட வெள்ளிக் கவசம் அகற்றப்பட்டு, அதிமுக சாா்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் திங்கள்கிழமை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், மணிகண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.பி. காளிமுத்து, ராஜேந்திரன், கருமலையான், அவைத் தலைவா் டி. சேகரன் உள்ளிட்ட திரளான அதிமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
வருகிற 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவா் ஜெயந்தி விழாவில், குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள், சமுதாய அமைப்பினா் பங்கேற்று தேவா் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனா்.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:
தேவா் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்துக்குப் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் ஆய்வாளா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
குருபூஜை விழா முடிந்ததும், நவ. 2 -ஆம் தேதி தங்கக் கவசம் அகற்றப்பட்டு, மீண்டும் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கிக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.